1. Home
  2. >>
  3. புனித அன்னம்மாள் எங்கள் பாதுகாவலர்

 ‘Anne’ என்ற பெயர் எபிரெய பெயர் ‘Hannah’ என்பதன் அர்த்தம் ‘கருணை’ ஆகும்.

புனித அன்னம்மாள் பற்றி பைபிள் எடுத்துரைக்காமல் இருந்தாலும், பிரபலமான கிறித்தவ பாரம்பரியத்தில் கன்னி மரியாவின் தாயார் புனித அன்னம்மாள் ஆவார்.

 அன்னம்மாள், மரபுப்படி பெத்லகேமில் பிறந்தார், இவர் நசரேத்து ஊரை சேர்ந்த புனித ஜோக்கீமை மணந்தார்.  ஜோக்கீம் எருசலேம் கோவிலிற்கு தியாகங்கள் செய்த  ஆடுகளை மேய்க்கும் ஒரு மேய்ப்பராக இருந்தார்.

இருபது ஆண்டுகளாக அன்னம்மாள் மற்றும் ஜோக்கிக்கிற்கு குழந்தை இல்லை.  ஒருமுறை, அவர்களிற்கு குழந்தை இல்லாத காரணத்தால் ஜோக்கிமை கேலி செய்தபோது, ​​அவர் பாலைவனத்திற்குச் சென்று அவர்களுக்கு ஒரு குழந்தை கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டினார்.  ஒரு தேவதூதர் ஜோக்கீமிடம், அன்னம்மாளிற்கு ஒரு பெண்ணை குழந்தை பிறப்பாள். அவள் மரியாள்  என்று பெயரிடப்படுவாள், அவள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவாள்  என உறுதிபடுத்தினார்.

 இதற்கிடையில் புனித அன்னம்மாள் தனது கணவன் இல்லாத போது அவள் குழந்தை இல்லாத துயரத்தில் கடவுளை பிரார்த்தனை செய்த வேளை அவள் பூந்தோட்டதில் உள்ள குருவிக்கூட்டில்  இரு குருவி குஞ்சுகளை  பார்த்தபோது வேதனையுற்ற அவள்: ஆண்டவரே, நான் ஏன் பிறந்தேன் என்று கேட்டாள். தேவதூதர் அவளிடம் தோன்றி, அவளிடம் விரைவில் பெண்குழந்தையை  பெற்றெடுப்பீர் அவளிற்கு மரியாள் என பெயரிடுவீர் என்றார். இந்த கதையானது அன்னம்மாள் மற்றும் ஜோக்கீமின் மகிழ்ச்சியான மறுபிறப்புடன் எருசலேமின் தங்க வாசல் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.

 அவளுடைய பிறப்புக்குப் பிறகு அன்னம்மாளும் ஜோக்கீமும் எருசலேமின் கோவிலில் மரியாளை கடவுளுக்கு அர்ப்பணித்தார்கள்.  அவளது குழந்தை பருவ வாழ்கையின் பெரும் பகுதி ஆலயத்தில் கழிந்தது. மரியாளிற்கு பதினான்கு வயதாக இருந்தபோது, ​​அவளை நசரேத்து ஊரை சேர்ந்த  யோசேப்புக்கு திருமணம் நிற்சயித்தனர், மரியாளின் வாழ்க்கை, மகனாக இயேசுவை இப் பூவுலகில் பெற்றெடுத்ததோடு தொடர்கிறது..

புனித அன்னம்மாளின் வாழ்க்கை  மரியாளின் புனித தாயாகவும், அவருடனான உறவு இயேசுவின் பாட்டியாகவும் ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு மிகவும் பிரபலமாக இருந்தது.  550 ஆம் ஆண்டில் எருசலேமில் புனித அன்னம்மாள் நினைவாக ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.  இத் தேவாலயம் அன்னம்மாளும் ஜோக்கீமும் மரியாளும் வாழ்ந்த இடத்திற்கு அருகே உள்ளதாக நம்பப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டு முதற்கொண்டு, கிரேக்க மற்றும் ரஷ்ய தேவாலயங்களில்  புனித ஜோகீம் மற்றும் புனித அன்னம்மாள் ஆகியோரை கௌரவிக்கும் பண்டிகைகள் கொண்டாடுகின்றன.  மேற்கத்திய தேவாலயங்களில் , பதினாறாம் நூற்றாண்டில் புனித அன்னம்மாளின்  விருந்து கொண்டாடத் தொடங்கினர். புனித அன்னம்மாளின் விருந்து ஜூலை 26 ஆகும்.

புனித அன்னம்மாள் தாய்மார்கள் மற்றும் தாத்தா பாட்டி மற்றும் கர்ப்பிணி மற்றும் மலட்டுத்தன்மையுள்ள பெண்களின் பாதுகாவலர் ஆவார்.  பொதுவாக மரியாள் அவளுக்கு அடுத்ததாகவோ அல்லது மடியில் இருந்தாலும் அவள் பெரும்பாலும் குழந்தை இயேசுவை அடையாளம் காட்டுகிறாள்.

 புனித அன்னம்மாளிற்கு செபம்

Good St. Anne, you were especially favored by God to be the mother of the most holy Virgin Mary, the Mother of our Savior. By your power with your most pure daughter and with her divine Son, kindly obtain for me the grace and the favour I seek. Secure for me the strength to perform faithfully my daily duties and the help I need to persevere in the love of Jesus and Mary. Amen.

You are donating to : Greennature Foundation

How much would you like to donate?
$10 $20 $30
Would you like to make regular donations? I would like to make donation(s)
How many times would you like this to recur? (including this payment) *
Name *
Last Name *
Email *
Phone
Address
Additional Note
paypalstripe
Loading...